நாளை படம் மூலம் கவனத்துக்கு வந்தவர் உதயபானு மகேஸ்வரன். நாளை ஹீரோ நட்ராஜை வைத்து இவர் இயக்கிவரும் படம் சக்கர வியூகம். அஷ்டவினாயக் தயாரிப்பு.
உதயபானு மகேஸ்வரனின் வொர்க்கிங் ஸ்டைல் தயாரிப்பாளர்களுக்கு பிடித்திருக்கிறது. அதனால் தங்களது அடுத்த தயாரிப்பிற்கும் உதயபானுவையே இயக்குனராக்கியிருக்கிறார்கள்.
அவரும் சந்தை என்ற ஸ்கிரிப்டுடன் தயாராக இருக்கிறார். மே மாதம் சக்கர வியூகம் ரிலீஸ். அது முடிந்ததும் சந்தையை ஸ்டார்ட் செய்கிறார் உதயபானு மகேஸ்வரன்.