அறுப்பதற்கே பயிர் இல்லை. இதில்¨ வறுப்பதற்கு நெய் கேட்டாளம் ஒருத்தி. கவுரி முஞ்சாலின் கதைக்கும் இது பொருந்தும்.
தொட்டால் பூ மலரும் படத்தில் ஷக்தி ஜோடியாக அறிமுகமானவர் கவுரி முஞ்சால். படம் ஷ¥ட்டிங்கில் இருக்கும் போது புதுமுகம் சிவாஜி ஜோடியாக நடிக்க சிங்கக்குட்டியில் வாய்ப்பு வந்தது.
இந்த இரண்டே வாய்ப்புகள்தான். யாரும் கவுரி முஞ்சாலை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அஸ்திவாரம் ஆட்டம் கண்ட நிலையில் புதிய அஸ்திரம் ஒன்றை தயார்படுத்தி வருகிறார் முஞ்சால்.
தனது தங்கை ஷிவா முஞ்சாலை விதவிதமாக புகைப்படம் எடுத்து வாய்ப்புக்காக கோடம்பாக்கத்தில் புழக்கத்தில் விட்டுள்ளார்.
திரைப்படம் பார்த்தே அக்காவுக்கு வாய்ப்புகளில்லை. இதில் புகைப்படம் பார்த்து தங்கைக்கு வாய்ப்புகளாவது... நல்ல ஜோக்தான் போங்க!