மகேஸ்வரன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், நவ்யா நாயர் நடிக்கும் படம் எட்டப்பன். இந்தப் பெயர் தங்களது குலப் பெருமையை குலைக்கிறது என எட்டப்பன் வாரிசுகளில் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வம்பு எதற்கு என படத்தின் பெயரை 'இது திருடிய கதை' என்று மாற்றினர். அவள் உள்ளத்தை என்பது சப்-டைட்டில்.
புதிய பெயர் அமங்கலமாக இருக்கிறது என பலரும் அபிப்ராயப்பட, சப்-டைட்டிலை டைட்டிலாக்கியுள்ளனர். இப்போது படத்தின் பெயர் அவள் உள்ளத்தை!
கன்னடத்தில் உபேந்திரா நடித்த படமொன்றின் ரீ-மேக் இது. போர்ஜிரியின் புதைகுழியில் விழுந்த நாயகனின் கதை என்பதால்தான் எட்டப்பனின் வாரிசுகள் எதிர்த்தனர். பெயர் மாறியதுடன் பிரச்சனையும் ஓய்ந்திருக்கிறது.