பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமாகும் படம் சக்கரக்கட்டி. கலாபிரபு இயக்கம். மொட்டையாக கலாபிரபு என்றால் தெரியாது. தயாரிப்பாளர் எஸ். தாணுவின் மகன் என்றால் தமிழகமே அறியும்.
இளமையான காதல்! இதுதான் சக்கரக்கட்டி. கலாபிரவுக்கு இதுவே முதல் படம். அப்பாவின் தயாரிப்பில் படம் இயக்கியவர்களிடம் தொழில் கற்றதோடு சரி. குறிப்பிட்ட குரு என்று சொல்ல இவருக்கு யாருமில்லை.
தனது முதல் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்று காத்திருந்து டியூன் வாங்கி படம் பண்ணியிருக்கிறார்.
படத்தின் டபுள் பாஸிடிவ் பார்த்த பாய்ராஜ் பரவசமடைந்து, இவ்வளவு தூரம் நான் எதிர்பார்க்கலை என்று கலாபிரபுவை வியந்து பாராட்டினார்.
கடைசியில் பாக்யராஜுக்கும் கிடைத்திருக்கிறது, சக்கரக்கட்டி வடிவில் ஓர் இனிப்பான செய்தி.