ரஜினி, கமலை அண்ட முடியாது. விஜய், விக்ரம், அஜித், சூர்யாவுக்கு கோடிகளை அள்ளிக் கொடுக்க வேண்டும். குறைந்த செலவில் தெரிந்த முகமாக தேடுகிறவர்களின் இப்போதைய ஒரே தேர்வு ஸ்ரீகாந்த்!
கல்யாண கலாட்டாவில் காணாமல் போனவரின் கால்ஷீட் டைரியில் இன்று ஹவுஸ்ஃபுல் போர்ட்! பூ, எட்டப்பன், இந்திர விழா படங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போதே பன்னீர் செல்வத்துக்கும் கால்ஹீட் தர சம்மதித்துள்ளார் ஸ்ரீகாந்த்.
இவரது ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், கிழக்கு கடற்கரை சாலை படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் பன்னீர்செல்வம். இவர் சொன்ன கதையில் சொக்கிக் போன ஸ்ரீகாந்த், கண்டிப்பா பண்ணுவோம் என வாக்கு கொடுத்திருக்கிறாராம்.