ராகவா லாரன்சின் இன்றைய பிரபலத்துக்கு பெரிதும் காரணமாயிருந்தவர் ரஜினி. அவரை ராகவேந்திரர் பக்தராக்கியதிலும் ரஜினிக்கு பெரும் பங்கு உண்டு. ரஜினியின் தீவிர பக்தர் ராகவா.
அவர் தேர்வு செய்திருக்கும் படத்திலிருந்தே இதை தெரிந்துகொள்ளலாம். பாண்டியில் நடித்துவரும் லாரன்ஸ் அடுத்து ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு ரீ-மேக்கில் நடிக்கிறார். ரஜினி காமெடியில் கலக்கிய இந்தப் படத்தை இந்தக் காலத்துக்கு ஏற்றபடி திருத்தி எழுதி வருகிறார் லாரன்ஸ்.
நேமிசந்த் ஜெபக் படத்தை தயாரிக்கிறது. படத்தை இயக்க திறமையான இயக்குனர்களுக்கு வலை வீசியிருக்கிறார்கள். வலையில் யாரும் விழவில்லையென்றால், இருக்கவே இருக்கிறார் லாரன்ஸ். ஆக்சன், கட் சொல்லி அவரே படத்தை ஆரம்பித்துவிடுவார்.