அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் 'சரோஜா' படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது முறையாக தடைபட்டிருக்கிறது.
முதல் முறை தடைபட்டது ஹைதராபாத்தில். படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் பான்ஸ் பிரச்சனை. நான்கைந்து நாட்களில் பிரச்சனைகளிலிருந்து சரோஜா மீண்டது. வெற்றிகரமாக முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் வெங்கட்பிரபு.
இரண்டாவது ஷெட்யூல் சென்னை கிண்டியில் நடந்து வருகிறது. சண்டைக் காட்சியொன்றில் வில்லன் ஆட்கள் புதுமுக நடிகர் வைபவின் தலையில் டியூப் லைட்டால் அடிக்க வேண்டும். சும்மா பாவ்லாதான். வைபவின் கெட்ட நேரம் நிஜமாகவே டியூப் லைட் தலையில் உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி வைபவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.