75 ஆண்டுகால திரையுலக பயணத்தை கண்முன் நிறுத்தும் அருங்காட்சியகம்!

வியாழன், 13 மார்ச் 2008 (18:28 IST)
75 ஆண்டு கால திரையுலக பயணத்தை கண்முன்னே ஓடவிடும் வகையிலான அரிய திரைப்பட கருவிகளை கொண்ட அருங்காட்சியகம் பூனாவில் திறக்கப்பட்டுள்ளது.

இந்திய திரைப்படம், தொலைக்காட்சி கல்வி நிறுவனம் (எப்.டி.ஐ.ஐ.) 75 ஆண்டுகாலமாக இந்திய திரையுலகில் பயன்படுத்தப்பட்டு வந்த புகைப்படக்கருவிகள் (காமிரா), திரைப்படம் காட்டும் இயந்திரம் (புரொஜக்டர்), கலைக்கூட கருவிகள் போன்றவற்றை கண்காட்சிக்கு வைத்து பார்வையாளர்களை அசர வைத்துள்ளது.

'சய்ரன்த்ர', 'சன்த் துகாராம்' ஆகிய அந்தக்கால கருப்பு, வெள்ளை திரைக்காவியங்களை எடுக்க பயன்படுத்தப்பட்ட கருவிகளும், 'பால் காந்தர்வா', 'விஷ்ணுபந்த் பக்நிஸ்' ஆகிய ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்களுக்கு பயன்படுத்தப்பட்ட செயற்கை கோபுரங்கள், மாட மாளிகைகள் ஆகியவையும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. திரைப்படங்களில் நடிகைகள் ஜொலிக்க காரணமான ஆபரணங்கள், பல்வேறு விதமான விளக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இயக்குனர் யாசிம் பேத்தெலால் கூறுகையில், 'கடந்த காலங்களில் கலைக்கூடங்களும், ஆய்வகங்களும் அருகருகே இருந்தன. இயக்குனர்கள் இரவில் பிலிம்களை டெவலப் செய்து, காலையில் திரை அரங்குகளில் பரிசோதிக்கும் வகையில் ஆய்வகங்களும், திரை அரங்குகளும் எதிரே இருந்தன. இந்த முறை அடுத்தகட்ட படபிடிப்பை திட்டமிட்டு மேற்கொள்ள சாதகமாக இருந்தது. ஆனால் தற்போது காட்சிகள் ஒருபக்கம் பதியப்பட்டு 'டெவலபிங்' செய்ய மும்பைக்கு அனுப்பப்படுகிறது' என்றார்.
இந்த கண்காட்சி 75 ஆண்டுகால பாலிவுட் நட்சத்திரங்களான தேவ் ஆனந்த், சுபாஷ் கய், நசீருதின் ஷா, ஜெய பாதுரி, ராஷா முராத், ஷத்ருகன் சின்கா, மிதுன் சக்ரபோர்டி, டாம் ஆல்டர், சஞ்சய் லீலா பான்சாலி, ராஜ் குமார் ஹிரானி ஆகியோர் சிறப்புமிக்க இந்த எப்.டி.ஐ.ஐ. நிறுவனத்தில் தான் தங்களது நடிப்பு திறமையை வளர்த்திக்கொண்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்