தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போன்ற குத்துப் பாடல்களைப் பாடிய விஜயின் தாயார், பக்தி ரசம் சொட்டச் சொட்ட பாடிய ஆடியோ குருராஜா சரணம்!
ஸ்ரீ ராகவேந்திரரின் புகழைச் சொல்லும் பாடல்களைக் கொண்ட குருராஜா சரணம் சி.டி.யை நேற்று விற்பனைக்கு கொண்டுவ்நதார் ஷோபா சந்திரசேகர்.
சி.டி.யை வெளியிட்டவரும் பெற்றுக் கொண்டவரும் தீவிர ராகவேந்திரர் பக்தர்கள். வெளியிட்டவர், ராகவேந்திரராக நடித்தவர். பெற்றுக் கொண்டவர் தனது பெயரில் ராகவேந்திரர் பெயரை சேர்த்துக் கொண்டதோடு சொந்தக் காசில் ராகவேந்திரர் கோயில் கட்டியவர். இன்னும் புரியவில்லை?
சி.டி.யை வெளியிட்டவர் ரஜினிகாந்த், பெற்றுக் கொண்டவர் ராகவா லாரன்ஸ். ரஜினியின் வீட்டில் நடந்த வெளியீட்டு விழாவில் ஒரேயொரு பார்வையார் மட்டுமே. அவர் ஷோபா சந்திரசேகரின் கணவர் எஸ்.ஏ. சந்திரசேகர்.