இதுவரை எந்தப் படத்திலும் இல்லாத வகையில் கந்தசாமி சண்டைக் காட்சிகள் எடுக்கப்படுகின்றன. வெளிநாட்டினருடன் விக்ரம் மோதும் சண்டைக் காட்சிகள் படத்தில் வருகின்றன.
மெக்சிகோவின் புகழ்பெற்ற காளைச் சண்டையும் படத்தில் இடம் பெறுவது தெரியும். விரைவில் போடியில் நடக்கும் சண்டைக் காட்சியில் விக்ரம் கலந்து கொள்கிறார். இதற்காக ஸ்பெஷல் பயிற்சி எடுத்து வருகிறார் அவர்.
கந்தசாமி ஸ்டைலிஷான படம், அதற்கேற்ப சண்டைக் காட்சிகளும் ஸ்டைலிஷாக இருக்கும் என்றார் சுசி. கணேசன். இதுவரை நடித்தப் படங்களைவிட கந்தசாமியில் விக்ரம் அதிக ரிஸ்க் எடுத்துள்ளாராம்.