சரத்துக்கு உதவிய சாய்மீரா!

திங்கள், 10 மார்ச் 2008 (17:04 IST)
சரத், மேக்னா நாயுடு நடித்த வைத்தீஸ்வரன் முடிந்து மாதங்கள் பல ஆகிறது. விற்பனையாகாமல் பெட்டிக்குள் இருந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது பிரமிட் சாய்மீரா!

வைத்தீஸ்வரன் மறுபிறவி குறித்த கதை. நாம் இருப்பது முதல் பிறவியிலா அல்லது மறுபிறவியிலா என்ற கேள்வியை இப்படம் எழுப்புகிறது. சரத்குமார் மன நல மருத்துவராக நடித்துள்ளார்.

படத்தை இயக்கியிருக்கும் ஆர்.கே. வித்யாதரன் ஒரு மருத்துவர். எந்த பரபரப்பும் இல்லாமல் பல மாதங்களாக இப்படம் பெட்டிக்குள் கிடந்தது. சரத்குமாரின் புதிய படம் 1977-ம் ·பைனான்ஸ் பிரச்சனையால் திணறிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வைத்தீஸ்வரனை வெளியிட பிரமிட் சாய்மீரா முன்வந்துள்ளது. சாய்மீராவின் முயற்சியால் மறுபிறவி படத்துக்கு புதுப்பிறவி கிடைத்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்