ராஜ் தாக்கரேக்கு நானா படேகர் ஆதரவு!
வெள்ளி, 7 மார்ச் 2008 (15:56 IST)
நடுநிலையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது, பிரபல ஹிந்தி நடிகர் நானா படேகரின் நடவடிக்கை.
ராஜ் தாக்கரேயின் மராட்டிய நவ நிர்மாண் கட்சியினர் வட மாநிலத்தவர்களைக் குறி வைத்துத் தாக்கி வருகிறார்கள். மராட்டியத்தில் மராட்டியர்களின் கலாச்சாரத்துக்குப் பணிந்தும், அனுசரித்தும் பிற மாநிலத்தவர்கள் நடக்க வேண்டும் என்று கூறி ராஜ் தாக்கரேயின் ஆட்கள் தேசத்தைத் துண்டாக்கும் வன்முறையில் இறங்கியுள்ளனர்.
தங்களது மண்ணின் மைந்தர் கோஷத்திற்கு ஆதரவாக கையெழுத்து வேட்டையிலும் இறங்கியுள்ளனர் ராஜ் தாக்கரேயின் ஆதரவாளர்கள்.
ஹிந்தி, தமிழ் எனப் பிற மொழிகளில் நடித்து வரும் நானா படேகர், இந்த மராட்டிய வெறியை ஆதரித்து ராஜ் தாக்கரேவுக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளார்.
ராஜ் தாக்கரேவின் மண்ணின் மைந்தர் கோஷம் தவறென்றால், மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்ததும் தவறுதான் என்று தாக்கரேவுக்கு ஆதரவாகத் தவில் வாசித்துள்ளார் நானா.
இன, மொழி வெறி இருப்பது நானா படேகர் போன்ற கலைஞர்களுக்க அழகல்ல!