கலைஞர் தொலைக்காட்சி தொடங்கும் வரை சன்தான் முதலிடத்தில் இருந்தது. புதிய படங்கள் வாங்குவதிலும் அதற்கு பெரிய அளவில் போட்டிகளில்லை.
கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பித்த பிறகு போட்டி தொடங்குகிறது. சிவாஜி படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் டி.வி. வாங்கியது சன்னுக்கு முதல் அதிர்ச்சி. தற்போது மோசர் பேர், டூயட் மூவிஸ் தயாரிக்கும் ஐந்து படங்களின் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கொத்தாக வாங்கியுள்ளது.
இந்த சன், கலைஞர் போட்டிக்கு நடுவில் புயலாக நுழைந்திருக்கிறது ஸீ டி.வி. வட இந்தியாவில் விருட்சமாக நிற்கும் ஸீ நெட்வொர்க் தமிழிலும் விரைவில் வேரூன்ற உள்ளது. அதன் முதல்கட்டமாக லம்பாக பணம் கொடுத்து படங்களின் உரிமையை வாங்குகிறார்கள்.
ஜெயராஜ் இயக்கத்தில் சென்ற வாரம் வெளிவந்த சில நேரங்களில் படத்தின் ஒளிபரப்பு உரிமையை ஸீ டி.வி. வாங்கி தனது கணக்கை தொடங்கியிருக்கிறது.
இந்த புதிய போட்டியில் படங்களுக்கான டிமாண்ட் உயரும். தயாரிப்பாளர்களுக்கு கொண்டாட்டம்!