வீடு புகுந்து தாக்கினாரா விவேக்?

வியாழன், 6 மார்ச் 2008 (19:53 IST)
காமெடி நடிகரான விவேக் திடீரென்று வில்லனாகி விட்டதாக கே.கே. நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார். உண்மையில் நடந்தது என்ன?

கே.கே. நகரில் விவேக்குக்கு சொந்தமான வீடு உள்ளது. அதில் எழுத்தாளர் சுப்ரஜா பல ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருக்கிறார். அவர்தான் விவேக் மீது புகார் கொடுத்தது.

விவேக்கும் வேறு சிலரும் வீடு புகுந்து பொருட்களை நாசம் செய்து, வீட்டை காலி பண்ணச் சொன்னார் என்பது சுப்ரஜாவின் புகார். சம்பந்தப்பட்ட விவேக் இதனை முழுமையாக மறுக்கிறார்.

எனது சகோதரி கே.கே. நகர் வீட்டிற்கு வரயிருப்பதால் வீட்டை காலி பண்ண சுப்ரஜாவிடம் மூன்று மாதத்திற்கு முன்பே கூறினேன். ஆனால், அவர் காலி பண்ணாமல் போலீஸில் பொய்யாக என் மீது புகார் கொடுத்திருக்கிறார் என்றார் விவேக்.

யார் சொல்வது உண்மை என்பதை கண்டறிய போலீஸ் விசாரணை செய்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்