ஒரே நேரத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர், நடிகை, தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என எவரையும் விடாமல் சோதனை நடத்தி தெலுங்குப் பட உலகுக்கு அதிர்ச்சி அளித்தது வருமான வரித்துறை!
போக்கிரி படத்தில் ஹீரோவாக நடித்த மகேஷ் பாபுதான் முக்கியமான டார்கெட். அடுத்து இவர் நடிக்கும் படத்துக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக செய்திகள் கூறுகின்றன. நேற்று காலை வருமான வரித்துறையினர் மகேஷ் பாபுவின் பன்சாரா ஹில்ஸ் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
தெலுங்கின் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம்பிடித்திருக்கும் சார்மியின் வீடும் சோதனைக்கு உள்ளானது. இவர்கள் தவிர தயாரிப்பாளர் தில்ராஜு, இசையமைப்பாளர் சக்ரி உள்ளிட்டோர்களின் வீடும் நேற்று தலைகீழாக புரட்டப்பட்டது.
இந்தச் சோதனையில் கணக்கில் வராத கோடிகளும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், வருமான வரித்துறையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஆந்திராவில் வீசிய சோதனைப் புயல் கோடம்பாக்கத்திலும் கலகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.