'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தில் வடிவேலு ஜோடியாக நடித்தவர் யாமினி சர்மா. ரம்மையாக நடித்த இவர் அடுத்து ஜெகன் மோனி ரீ-மேக்கில் நடிக்கிறார்.
கிராபிக்ஸ் இல்லாத காலத்தில் விட்டலாச்சாரியார் அனைவரும் வியக்கும் வகையில் எடுத்தப் படம் ஜெகன்மோகினி. பேயின் அட்டகாசங்களை அவர் திரையில் கொண்டுவந்த விதம் ஆச்சரியமானது. ஜெகன்மோகினியின் இன்னொரு ஹைலைட் ஜெயமாலினி. மோகினியாக வரும் இவரது கிளாமர் இன்றைக்கும் பிரசித்தம்.
விட்டாலாச்சாரியாரின் மகன் ஜெகன் மோகினி படத்தை ரீ-மேக் செய்கிறார். ஜெயமாலினி நடித்த மோகினி வேடத்தில் நடிப்பவர் நமிதா. இந்தக் காலத்துக்கு ஒரு மோகினி போதாது என்று நினைத்தார்களா தெரியவில்லை. ரீ-மேக்கில் யாமினி சர்மாவையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஜெகன் மோகினி என்பதற்குப் பதில் இரு மோகினிகள் என்று பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும்.