மார்ச் 14 ஆம் தேதி நடப்பதாக இருந்த தசாவதாரம் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. விழா தேதியுடன் விழா நடக்கும் இடத்தையும் மாற்றப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தசாவதாரம் இசை வெளியீட்டு விழாவை நேரு உள் விளையாட்டரங்கில் நடத்தப் போவதாக தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறியிருந்தார். எண்பது லட்ச ரூபாயில் பிரமாண்ட மேடை அமைக்கப்படுவதாகவும் கூறினார்.
ஆனால், இப்போது இசை வெளியீட்டு விழாவை நேரு உள் விளையாட்டு அரங்கிலிருந்து சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு மாற்றியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வந்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.