பாங்காக் செல்லும் அமீர், விக்ரம்!

வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (20:14 IST)
நடிப்புக்காக உடம்பை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள தயாராக இருப்பவர் விக்ரம். நினைத்தது கேமராவில் பதியும் வரை நடிகர்களை பிழிந்து எடுப்பவர் அமீர்.

இருவரும் ஒரு படத்தில் இணைந்தால்?

இந்த அதிசய சங்கமம் விரைவில் நிகழ இருக்கிறது. யோகியில் நடித்துவரும் அமீர், அது முடிந்ததும் ஜெயம் ரவியை வைத்து கண்ணபிரான் படத்தை இயக்குகிறார்.

கண்ணபிரானுக்குப் பிறகு அமீர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார். படத்தின் அவுட்லைனை விக்ரமிடம் ஏற்கனவே கூறிவிட்டார் அமீர்.

பருத்திவீரன் எப்படி கிராமத்துப் புழுதியுடன் இருந்ததோ அதற்கு நேர் எதிர் திசையில் இந்தப் படம் இருக்கும். படப்பிடிப்பு முழுவதும் பாங்காக்கில் நடத்த திட்டமிட்டுள்ளார் அமீர்.

அமீரின் இயக்கத்தில் உருவாகும் முதல் ஸ்டைலிஷான மேக்கிங்காக இப்படம் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்