பஞ்சு, சொல்லி அடிப்பேன் இரண்டும் விவேக் நாயகனாக நடித்த படங்கள். இதில் பஞ்சு பாதியிலேயே பஞ்சரானது. சொல்லி அடிப்பேன் முழுதாக தயாராகியும் பெட்டியை விட்டு இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில் குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் மீண்டும் ஹீரோவாகிகறார் விவேக். கும்மாளம் மூர்த்தி படத்தை எழுதி இயக்குகிறார்.
முதல் இரண்டு படங்களுக்கு வீரமிகு பெயர் வைத்தவர்கள், இந்தப் படத்துக்கு 'சிரிப்பு திருடன் பூச்சி பாலு' என்று பெயர் வைத்துள்ளனர். விவேக்கிற்கு யாரை ஜோடியாகப் போடுவது என்று தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.