இரண்டு வார முடிவில் 46 லட்சங்களுடன் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தில் இருக்கிறது மிஷ்கினின் அஞ்சாதே!
சித்திரம் பேசுதடி போல, படத்தில் நல்ல விஷயங்கள் நிறைய இருந்தும், கத்தாழ கண்ணால பாட்டுக்கே பரவசமாகிறார்கள் ரசிகர்கள். இதனை உணர்ந்து, அந்தப் பாடலுக்கு ஆடும் ஸ்னிக்தாவின் படத்தை பெரிதாகப் போட்டு விளம்பரப் படுத்துகிறார்கள்.
வார இறுதி வசூலில் அஞ்சதேக்கு அடுத்த இடத்தில் வருகிறது வடிவேலு மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்'. அதற்கு அடுத்த இடத்தில் கே.எஸ். அதியமானின் தூண்டில், இதன் மூன்றுநாள் சென்னை வசூல் 8 லட்சங்கள் மட்டுமே!
நான்காவதாக வரும் விக்ரமின் 'பீமா' இன்னும் மூன்று கோடியை எட்டவில்லை. சென்னை வசூலை வைத்துப் பார்க்கையில், 2008-ல் வெளியான எந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது உறுதியாகிறது.