ஷாமா சிக்கந்தர்! பாலிவுட்டை சில்லிட வைத்த பெயர். அவரை தமிழுக்கு அழைத்து வந்து ஒரு பாடலுக்கு ஆடவிட்டிருக்கிறார் இயக்குனர் விஜி.
இவர் இயக்கும் 'வெள்ளித்திரை'யில் கஞ்சிப் பானை எனத் தொடங்கும் பாடலொன்று வருகிறது. பிரகாஷ்ராஜ் ஆடும் இந்தப் பாடலுக்கு பார்ட்னர் ஒருவர் தேவைப்பட்டிருக்கிறார்.
புதுமுகமாக இருந்தால் நல்லது என்று வடக்கே ஆடிக் கொண்டிருந்த ஷாமாவை அழைத்து வந்து ஆடவிட்டிருக்கிறார்கள். 'வெள்ளித்திரை'யின் ஹைலைட்களில் ஷாமாவின் பாடலும் ஒன்று.