அஜந்தாவில் 36 பாடல்களுக்கு மெட்டமைத்த இசை ஞானி அடுத்தடுத்தப் படங்களில் பிஸி. கண்களும் கவிபாடுதே படத்தில் ஆயிரத்து ஐநூறு அடியை வசனம் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள். இளையராஜாவின் இசைதான் இந்த 1,500 அடியையும் நிரப்பப் போகிறது.
இதனைத் தொடர்ந்து அழகர்மலை படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. எஸ்.பி. ராஜ்குமார் இயக்குகிறார். தூண்டிலில் வில்லனாக நடித்த ஆர்.கே. இதில் ஹீரோ. இவர் ஷாஜி கைலாஷின் எல்லாம் அவன் செயல் படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அழகர்மலை கதை கேட்டு அசந்துபோனாராம் இசை ஞானி. அசத்தலான டியூன் போட்டு பதிலுக்கு இயக்குனரை அசரடித்திருக்கிறார் அவர்.