பேட்டி கொடுக்க மாட்டேன், பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன் என்று சிம்பு சொன்னபோது ரிலாக்ஸாக நிம்மதியடைந்தவர்கள் நிறைய பேர். அவர்கள் ஆறுதலுக்கு ஆணி அடித்திருக்கிறார் சிம்பு.
சரவணன் இயக்கும் சிலம்பாட்டம் படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமானவர் தினா. பாடல்களுக்கு டியூன் போட்டு, பழைய பாடலொன்றை ரீ-மிக்ஸ் செய்து தினாவின் வேலை அனேகமாக முடிந்தபோது திடீர் அறிவிப்பு. சிலம்பாட்டத்தில் தினாவுக்குப் பதில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்!
சிம்பு படங்களுக்கு யுவன்தான் பொதுவாக இசையமைப்பார். எனக்கு யுவன்தான் செட்டாகும் என்று. தினாவை தூக்கிவிட்டு யுவனை ஒப்பந்தம் செய்ய வற்புறுத்தியதே சிம்புதானாம்.
பிரச்சனை சிம்புவின் பேச்சில் இல்லை, அவரது செயலில் இருக்கிறது.