ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஃபிலிம்ஃபேர் விருது!

திங்கள், 25 பிப்ரவரி 2008 (13:13 IST)
இந்திப் படங்களுக்கான 53வது ஃபிலிமஃபேர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்தது போல் அமீரக்னின் தாரே ஜமீன் பர் விருதுகளைக் குவித்துள்ளது.

சக் தே இந்தியாவில் நடித்த ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான விருது பெறுபவர் ஜப் வி மெட் படத்தில் நடித்த கரீனா கபூர்.

சிறந்த படம் தாரே ஜமீன் பர். இதனை இயக்கிய அமீர் கான் சிறந்த இயக்குனருக்கான விருது பெறுகிறார். இதில் நடித்த சிறுவன் டர்ஷிர் சபாரிக்கு சிறந்த நடிகருக்கான விமர்சகர் விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருதை தபுவும் (சீனி கம்), சிறந்த படத்துக்கான விமர்சகர் விருது சக்தே இந்தியாவும் பெறுகின்றன.

சாவரியாவில் நடித்த ரன்பீர் கபூருக்கு சிறந்த புதுமுக நடிகருக்கான விருதும் ஓம் சாந்தி ஓமில் நடித்த தீபிகா படுகோனுக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளது.

'குரு'வுக்கு சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர். ரஹ்மான்), சிறந்த பின்னணி பாடகி (ஸ்ரேயா கோஷல்), சிறந்த கலை இயக்குனர் (சமீர் சந்தா) என மூன்று விருதுகள் கிடைத்துள்ளன.

ரிஷி கபூர் வாழ்நாள் சாதனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை ஓம் சாந்தி ஓம் மணிகண்டன் அல்லது சாவ்ரியா ரவி. கே. சந்திரன் தட்டிச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சக் தே இந்தியாவில் சதீப் சட்டர்ஜி சிறந்த ஒளிப்பதிவாளராக தேர்வு செய்யப்பட்டு, தமிழர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்