எய்ட்ஸ் விழிப்புணர்வு படத்தில் ஷகிலா!

சனி, 23 பிப்ரவரி 2008 (19:25 IST)
முள்ளை முள்ளால் எடுப்பது பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். அதே டெக்னிக்கில் ஒரு படம் தயாராகிறது.

காலை காட்சிப் படங்களில் நடித்தே, மம்முட்டி, மோகன்லால் படங்களை ஓரங்கட்டியவர் ஷகிலா. இவரால் கலாச்சாரமே கெட்டுப் போச்சு என மலையாள நடிகர்கள் எழுப்பிய கூச்சலுக்குப் பயந்து, கோடம்பாக்கத்தில் கரை ஒதுங்கினார்.

பேசுவது கிளியா படத்தில் ராக்கம்மா மெஸ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்துகிறவராக வருகிறார் ஷகிலா. இவருக்கு ஜோடி முத்துக்காளை.

எய்ட்ஸ் விழிப்புணர்வைப் பற்றியதாம் கதை. இப்படியொரு படத்தில் நடிக்க வைத்து கவுரப்படுத்திட்டீங்களே என படத்தின் இயக்குனர் எஸ். கெளரி சங்கரை கண்கலங்க வாழ்த்தினாராம். சன்மானமாக கரன்ஸி வேறு கொடுத்திருக்கிறார்.

சொல்லி புளங்காகிதம் அடைகிறார் எஸ். கெளரி சங்கர்.

வெப்துனியாவைப் படிக்கவும்