விஜயகாந்த் நடிக்கும் அரசாங்கம் படத்தின் படப்பிடிப்பை பல வெளிநாடுகளில் நடத்தி முடித்து திரும்பியிருக்கிறார் மாதேஷ். கனடாவில் எடுத்தக் காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதாக தகவல்.
படப்பிடிப்புக்காக கனடா சென்றபோது கேத்ரின் என்ற கனடா நாட்டு நடிகையை பிடித்து, அவரையும் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஏற்கனவே படத்தில் நவ்நீத் கெளர், ஷெரில் பிரிண்டோ என இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள். கேத்ரின் மூன்றாவது.