குசேலன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை!

வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (17:56 IST)
நேற்று சினிமாவுக்கு வந்து இன்று ரஜினி படத்துக்கு இசையமைப்பது எல்லாம் கனவில் மட்டுமே நடக்கிற காரியம். ஜி.வி. பிரகா¤க்கு அந்தக் கனவு கைகூடியிருக்கிறது.

இந்த டீன் ஏஜ் இசையமைப்பாளரின் ரூட்டே தனி. ஏ.ஆர். ரஹ்மான் முதல் அனைவரும் ரீ-மிக்ஸில் புகுந்து புறப்படும் போது இவர் மட்டும் ரீ-மிக்ஸ் பண்ணமாட்டேன் என தனித்து நிற்கிறார். பொல்லாதவன் எங்கேயும் எப்போதும் ரீ-மிக்ஸ் இவர் இசையமைத்ததல்ல.

பாடல் கம்போஸிங் என்றாரே வெளிநாட்டுக்கு ஃபிளைட் ஏறும் இசையமைப்பாளர்களுக்கு மத்தியில் சென்னை ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து குசேலன் பாடல்களை உருவாக்கி வருகிறார் ஜி.வி. பிரகாஷ். இவர் போடும் பல டியூன்களிலிருந்து தி பெஸ்ட்டை மட்டும் தேர்வு செய்திருக்கிறார் பி. வாசு. இதுவரை இரண்டு பாடல்களுக்கான டியூன்கள் மட்டுமே தேறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்