முதலிடத்தில் மிஷ்கினின் அஞ்சாதே!

வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (17:53 IST)
சென்னை பாக்ஸ் ஃபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது மிஷ்கினின் அஞ்சதே!

நரேன், அஜ்மல், பிரசன்னா நடித்திருக்கும் இந்தப் படத்தின் காட்சிகள், முக்கியமாக பிரசன்னா வரும் பகுதிகள் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.

'கத்தாள கண்ணாலே...' பாடல் வாளமீன் பாடல் அளவுக்கு இல்லையென்றாலும், பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

படம் வெளியான முதல் மூன்று நாட்களில் சென்னை சிட்டியில் மட்டும் பதினாறு லட்சம் வசூலித்துள்ளது அஞ்சாதே. இது விக்ரமின் பீமா, வடிவேலின் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படங்களின் வார இறுதி வசூலை விட அதிகம்.

பத்திரிக்கைகள் அஞ்சாதேக்கு நல்ல முறையில் விமர்சனம் எழுதியிருப்பதால், வரும் நாட்களில் இன்னும் அதிகம்பேர் படம் பார்க்க வருவார்கள் என நம்புவதாக திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்