ரஜினியின் முரட்டுக்காளை ரீ-மேக்கில் நடிக்க விஜய்க்கு ரொம்ப நாளாக ஆசை. இந்த ஆசையில் புதிதாக சேர்ந்திருக்கிறது ரஜினியின் ராஜா சின்ன ரோஜா.
விஜய் தனது ஆரம்பக் கல்வியை முடித்தது கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில். இந்தப் பள்ளிக்கு இது ஐம்பதாவது ஆண்டு விழா. இதையொட்டி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த விழாவில், பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற முறையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் விஜய்.
விழாவில் பேசிய விஜய், எனது படங்களில் குழந்தைகளை மகிழ்விக்கும் காட்சிகள் இருக்கும்படி பார்த்துக் கொள்வேன் என்றார். தனக்கு ஆசையிருப்பதாகக் கூறியவர், யாராவது ரஜினியின் ராஜா சின்ன ரோஜா படத்தை ரீ-மேக் செய்தால் அதில் நடிப்பேன் என்றார்.
தளபது தனது ஆசையை கூறிவிட்டார். தயாரிப்பாளர்கள் யாராவது தயாராக இருக்கிறார்களா?