நேற்று கந்தசாமி படப்பிடிப்பு நடந்திருக்க வேண்டும். விக்ரம், இயக்குனர் சுசி. கணேசன் உட்பட அனைவரும் தயார். ஆனால், படப்பிடிப்பு நடக்கவில்லை. ஸ்ரேயா முத்தக் காட்சியில் நடிக்க மறுத்தார், அதனால் இயக்குனர் பேக்கப் சொல்லிவிட்டார் என கோடம்பாக்கத்தில் பரபரப்பு.
ஆனால் நடந்தது வேறு.
நேற்றைய காட்சியில் விலையுயர்ந்த ஆடை ஒன்றை அணிந்து ஸ்ரேயா நடிக்க வேண்டும். மும்பையில் தயாரான அந்த ஆடையை சென்னை வரும்போது எடுத்துவர ஸ்ரேயா மறந்துவிட்டார். அதுபோன்ற ஆடை உடனடியாக சென்னையில் கிடைக்காததால் வேறு வழியில்லாமல் பேக்கப் சொன்னதாக சுசி. கணேச்ன கூறினார்.
மும்பையிலிருக்கும் ஸ்ரேயாவின் அம்மா விமானத்தில் அந்தஉடையை இன்ற எடுத்து வருகிறார். அதனால் நேற்று தடைபட்ட கந்தசாமி படப்பிடிப்பு இன்று நடக்கிறது.