ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை ராஜு சுந்தரம் இயக்கி வருகிறார். இதில் அஜித் ஜோடியாக முதலில் நடிப்பதாக இருந்தவர் ஸ்ரேயா. வடிவேலுடன் அவர் ஒரு பாடலுக்கு ஆடியதைத் தொடர்ந்து ஸ்ரேயா படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
webdunia photo
FILE
பிறகு கத்ரினா கைஃபை ஒப்பந்தம் செய்தனர். இப்போது அவரும் படத்திலிருந்து விலகியிருக்கிறார்.
கத்ரினாவுக்கு புதிதாக இரண்டு இந்திப் பட வாய்ப்புகள் வந்துள்ளன. இதில் ஒன்றில் ஜான் ஆப்ரஹாமுடன் நடிக்கிறார். அஜித் படத்திலிருந்து கத்ரினா விலகியதற்கு புதிதாக இந்தப் படங்களில் ஒப்பந்தமானதே காரணம் எனக் கூறப்படுகிறது.
அஜித் படத்துக்கு கதாநாயகி கிடைக்கவில்லை என்றாலும், பெயர் கிடைத்திருக்கிறது. 'ஏகன்' என்று பெயர் வைத்துள்ளனர். ஏகலைவனின் சுருக்கமாம் ஏகன்!