கருணாஸின் திடீர் முடிவு!

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (17:53 IST)
கருணாஸின் சாது மிரண்டா காமெடிக்கு நல்ல ரெஸ்பான்ஸ். கைவசம் இரண்டு டஜன் படங்கள் இருக்கிறது. விரைவில் பாலா தயாரிப்பில் கதாநாயகனாகும் வேலைகளும் நடக்கிறது.

இந்த வசந்த காலத்தை வருஷம் முழுக்க தக்கவைத்துக் கொள்ள நினைக்கிறார் கருணாஸ். அதற்காக அதிரடி முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார்.

அந்த முடிவு, இனி படங்களை வாங்கி விநியோகிப்பதில்லை என்பதே!

'பொறி', 'கற்றது தமிழ்' படங்களின் விநியோக உரிமை வாங்கியதில் கருணாஸின் பர்ஸ் பழுத்துவிட்டது. பல லட்சங்கள் நஷ்டம். இனி விநியோக ரிஸ்க் எடுப்பதில்லை என விவேகமான முடிவை எடுத்துள்ளார். அதற்குப் பதில் கதாநாயகன் ரிஸ்க்கே மேல் என அதில் கவனம் செலுத்துகிறார் கருணாஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்