ரஜினி வேடத்தில் ஷாருக் கான்!

சனி, 16 பிப்ரவரி 2008 (12:48 IST)
தான் இயக்கிய பழைய மலையாளப் படங்களை மட்டுமின்றி, பிற இயக்குனர்களின் வெற்றி பெற்ற படங்களையும் இந்தியில் ரீ-மேக் செய்து வருகிறார் ப்ரியதர்ஷன்.

பாசில் இயக்கிய 'மணிசித்ரதாழ்' தமிழில் சந்திரமுகியான போது, அதே கதையை 'பூல் புலையா' என்ற பெயரில் இந்தியில் ரீ-மேக் செய்து, பெரிய வெற்றிப் படமாக்கினார் ப்ரியதர்ஷன்.

இந்த முறை அவர் தேர்ந்தெடுத்திருப்பது கதபறயும் போள். சீனிவாசனின் இந்தப் படம் குசேலன் என்ற பெயரில் ரஜினி நடிப்பில் தயாராக இருக்கிறது. இதே படத்தை ஷாருக் கானை வைத்து இந்தியில் ரீ-மேக் செய்கிறார் ப்ரியதர்ஷன்.

தமிழில் ரஜினி நடிக்கும் அதே வேடத்தை இந்தியில் ஷாருக் கான் செய்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்