ஐஸ்வர்யா ராய் குழந்தைப் பெற்றுக்கொள்ளப் போகிறார், அதனால் ரஜினி ஜோடியாக ரோபோ படத்தில் நடிக்கவில்லை என்று ஒரு செய்தி கிளம்பியது. இதனை மறுத்து பேட்டியளித்தார் ஐஸ்வர்யா ராய்.
இப்போது நான் கர்ப்பமாக இல்லை, குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணமும் தற்போதைக்கு இல்லை என்றார்.
ரஜினி ஜோடியாக நடிப்பது பற்றி கூறும்போது, "ரோபோ வித்தியாசமான கதை. அதில் எனக்கு முக்கியமான வேடம். ரோபோவில் நான் நடிக்கவில்லை என்று வரும் செய்திகளில் உண்மையில்லை" என்று ரோபோ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.