அடுத்த மாதம் தசாவதாரம் படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர். சோனி நிறுவனம் பாடல்களை வெளியிடும் உரிமையை வாங்கியிருக்கிறது.
இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகின்றன. படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் சகோதரர் ரமேஷ் பாபு வெளிநாடு சென்றுள்ளார்.
இசை வெளியீட்டு விழாவிற்கு ஜாக்கிசானை அழைக்கவே இநத் வெளிநாட்டுப் பயணம் என்கிறார்கள். அவர் திரும்பி வந்ததும் படத்தின் இசையை யார் வெளியிடுகிறார்கள் என்பது முடிவு செய்யப்படும்.
சோனி நிறுவனம் முதல்கட்டமாக இரண்டு லட்சம் சி.டி.க்களை வெளியிடுகிறதுஐ. ஒரு ஆடியோ சி.டி.யின் விலை 99 ரூபாய்!
தமிழ் திரை வரலாற்றில் ஒரு படத்தின் ஆடியோவுக்கு இத்தனை அதிக விலை வைக்கப்படுவது இதுவே முதல் முறை. கொடுக்கிற பணத்துக்கு தகுதியானதுதான் ஹிமேஷ் ரேஷம்யாவின் இசை என்கிறார்கள் படத்தின் பாடல்களை கேட்டவர்கள்.