அக்னி நட்சத்திரத்தில் சிம்பு, தனுஷ்!

வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (16:48 IST)
webdunia photoWD
படங்களில் பன்ச் வசனம் பேசி சிம்புவும், தனுஷும் பரஸ்பரம் வம்புக்கிழுத்தது எல்லாம் முன்பு. இப்போது இருவரும் 'திக்' ஃப்ரெண்ட்ஸ். இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது.

ஞானம் ஃபிலிம்ஸ் பிரவுதேவா இயக்கத்தில் படம் ஒன்றை தயாரிக்கிறது. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் அக்னி நட்சத்திரம் என பெயர் வைத்துள்ளனர். பெயரைத் தவிர மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரத்துக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இதில் சிம்பு, தனுஷ் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்பது தயாரிப்பாளர் மற்றும் பிரவுதேவாவின் கருத்து. சிம்புவை சந்தத்து இது குறித்துப் பேசினார் பிரபுதேவா. "நாங்கள் நண்பர்கள். தனு¤டன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன்" என சிம்பு பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

தனுஷிடம் இன்னும் பிரபுதேவா இது குறித்துப் பேசவில்லை. அவரும் ஒத்துக்கொண்டால், இந்தி போக்கிரி, ஐங்கரன் இன்டர்நேஷனலுக்காக இயக்கும் விஜய் படம் இரண்டும் முடிந்தபிறகு அக்னி நட்சத்திரத்திரத்தை பிரபுதேவா இயக்குவார்.

வெப்துனியாவைப் படிக்கவும்