முதல் முறையாக விஷாலின் படம் ஒன்று மூன்று மொழிகளில் வெளியாகிறது.
சண்டக்கோழி, தாமிரபரணி படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆந்திராவிலும் வசூல் சாதனை புரிந்தன. நேரடி தெலுங்குப் படத்தில் நடிப்பதற்கும் விஷாலுக்கு அழைப்புகள் வந்தன.
இதனை மனதில் வைத்து 'சத்யம்' படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார்கள். இதில் முக்கியமான வேடத்தில் கன்னட ஹீரோ உபேந்திரா நடிக்கிறார்.
படத்தில் தொடர் கொலைகள் செய்பவராக உபேந்திரா நடித்தாலும், அவரது கதாபாத்திரத்தை வில்லத்தனம் ஏதுமின்றி உருவாக்கியிருக்கிறார்கள். இதனால் 'சத்யம்' கன்னடத்திலும் வெளியாகிறது.