செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (19:08 IST)
அருண் விஜய் நடித்த வேதா படத்தை வாசு பாஸ்கர் தயாரித்திருந்தார். கோலாலம்பூரைச் சேர்ந்த ராஜாராம் என்பவர், வாசு பாஸ்கர் தன்னிடம் 24 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதனைத் திருப்பித் தரும் வரை வேதா படத்தைத் திரையிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, படத்தை வெளியிட நான்கு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த வாசு பாஸ்கர், படம் வெளியாகும் முன்பு ராஜா ராமுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் கொடுப்பதாகவும், படம் வெளியான மூன்று வாரங்களில் மீதிப் பணத்தைக் கொடுப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, படத்தை வெளியிட விதித்திருந்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.