அலிபாபா தொடக்க விழா!

திங்கள், 11 பிப்ரவரி 2008 (18:54 IST)
டாக்கிங் டைம்ஸ் மூவிஸின் அலிபாபா படத்தின் தொடக்க விழா இன்று காலை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்றது!

சிவசக்தி பாண்டியன், அன்பாலயா பிரபாகரன், அமுதா துரைராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். படத்தின் நாயகன் கிருஷ்ணா இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி. இவர்களின் தந்தை சேகர்தான் அலிபாபாவின் தயாரிப்பாளர்.

இயக்குனர் நீலன் கே. சேகர் பேசும்போது, எனக்கு இது முதல் படம். நீங்கள் ஆதரவு தரவேண்டும் என பத்திரிக்கையாளர்களை கேட்டுக் கொண்டார். படத்தின் கதை பற்றி கேட்டதற்கு நீலன் சொன்ன பதில், 'வந்தார்கள், வென்றார்கள்!' இப்போதைக்கு இந்த ஒரு வரிக்கு மேல் கூறமுடியாது என்று நழுவினார்.

படத்துக்கு கேமரா தினேஷ்குமார். அலிபாபா கதையை நீலன் தன்னிடம் ஆறு வருடங்களுக்கு முன்பே கூறியதாக சொன்னார் தினேஷ்குமார்.

வந்தவர்கள் அனைவரும் கிருஷ்ணாவுக்கு வஞ்சனையில்லாமல் வாழ்த்துச் சொன்னார்கள். படத்தன் நாயகி ஷெரின் (துள்ளுவதோ இளமை ஷெரின் அலல). தமிழ் சினிமாவுக்கு ஏற்ற தமிழ் தெரியாத அறிமுகம்.

இன்றே படப்பிடிப்பு ஆரம்பமாகிறது என்றார். விஷ்ஷவர்தனின் அசிஸ்டெண்ட்டான நீலன் கே. சேகர்.

வெப்துனியாவைப் படிக்கவும்