சனி, 9 பிப்ரவரி 2008 (13:58 IST)
விஜய் நடிக்கும் குருவியின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு சேலத்தில் தொடங்கியது. விஜய் நடிக்கும் காட்சிகள் இங்கு படமாக்கப்படுகின்றன.
சேலத்துக்குக் கிளம்பும் முன் பொல்லாதவன் படத்தில், எங்கேயும் எப்போதும் பாடலைப் பாடிய யோகியுடன் விஜய் சேர்ந்து ஆடும் பாடல் காட்சியை சென்னையில் படமாக்கினார் தரணி.
பொல்லாதவனில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ரீ- மிக்ஸ் பாடல்களுக்கு இசையமைக்க மாட்டேன் என்று சென்னதால், எங்கேயும் எப்போதும் பாடலுக்கு யோகி இசையமைத்தார்.
குருவியில் பாடி ஆடியதோடு சரி. இசை அமைத்தது வித்யாசாகர்.
சேலத்தைத் தொடர்ந்து புனேயில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் விஜய்.