ராமன் தேடிய சீதை மற்றும் பூ படங்களைத் தயாரிக்கும் மோசர் பேர் அடுத்து, அவள் பெயர் தமிழரசி என்ற படத்தை தயாரிக்கிறது. ராமன் தேடிய சீதையில் கவுரவ வேடத்தில் தோன்றும் நவ்யா நாயர், தமிழரசியில் நாயகியாக நடிக்கிறார்.
எழுத்தாளர் மீரா கதிரவன் இந்தப் படத்தை இயக்குகிறார். வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக படத்தயாரிப்பில் ஈடுபட முடியாது. இதனால் பூ படத்தை சசியின் சொந்த நிறுவனத்துடன் (?) இணைந்து தயாரிக்கும் மோசர் பேர், அவள் பெயர் தமிழரசி-யையும், வேறு நிறுவனத்துடன் இணைந்தே தயாரிக்கிறது.
படத்துக்கு நல்ல ஹீரோவாக தேடிக் கொண்டிருக்கிறார் மீரா கதிரவன்.