அனிமேஷனில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

வியாழன், 7 பிப்ரவரி 2008 (17:05 IST)
முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறை யார் படமாக்குவது என முன்னாள் சபாநாயகர் அமரர் கா. காளிமுத்துவின் மகனும், தயாரிப்பாளர் கே.வி. குணசேகரனும் அடித்துக் கொண்டது தனிக்கதை.

webdunia photoFILE
அவர்கள் எடுப்பதாகச் சொன்ன படம் பரணில் போய் மாதங்கள் ஆகிறது. அதே நேரம் ஆர்ப்பாட்டமில்லாமல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வரலாறு என்ற பெயரில் குறும்படம் ஒன்றை எடுத்திருக்கிறார் ஆபிரகாம் லிங்கன்.

பெயர்தான் குறும்படமே தவிர, ஒன்றரை மணி நேரம் படம் ஓடுகிறது. தேவராக யாரை நடிக்க வைத்தாலும் எதிர்கோஷ்டிகள் ஆயிரம் குறை சொல்லும் என்பதால் தேவரை மட்டும் அனிமேஷனில் உருவாக்கி உலவ விட்டிருக்கிறார். மற்றவர்கள் சாதாரண படங்களில் வருவது போல் நடித்திருக்கிறார்கள்.

படம் நன்றாக வந்தாலும் அதன் நேரம் காரணமாக, படத்தை திரையரங்கில் வெளியிடுவதா, தொலைக்காட்சியில் ஓடவிடுவதா என எடுத்தவர்களுக்கு குழப்பம். சீக்கிரமே குழப்பம் தெளிந்தால் தேவர் வரலாறை நாலு பேர் பார்ப்பார்கள்.