ரஜினி நடிக்கும் குசேலன் படத்தில் பசுபதி ஜோடியாக நடிக்க நடிகை மீனா ஒப்பந்தமாகியுள்ளார்!
இந்த வேடத்தில் நடிக்க முதலில் வாசு அணுகியது சிம்ரனை. அவர் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கயிருப்பதாலும், அதிக சம்பளம் கேட்டதாலும், நடிகை தபுவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை.
ரஜினி படத்தில் நடிக்க நடிகைகள் நான், நீ என போட்டிப் போடுவார்கள். ஆனால், குசேலனில் நடிக்க மறுத்ததற்குக் காணரம் சுவாரஸ்யமானது.
குலேசனின் ஒரிஜினலான கதை பறயும்போள் படத்தில் ஒரு காட்சி வருகிறது. சீனிவாசன் தனது மகளிடம், உனக்கு டாக்டர், என்ஜினியர் இரண்டில் யாராக ஆவதற்கு ஆசை என்று கேட்பார். அதற்கு, மகள் ஒழுங்கா ஃபீஸ் கொடுக்கிற ஸ்டூடண்டா ஆகணும்கிறதுதான் எனது ஆசை என்பார்.
இப்படி புத்திசாலித்தனமாக பதில் சொல்லும் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு அம்மாவாக நடிக்க வேண்டும்! எந்தத் தமிழ் நடிகை இதற்கு ஒப்புக்கொள்வார்? அதுவும் ஒன்றல்ல, 3 குழந்தைகளுக்கு. அதனால்தான், மலையாளத்தில் சீனிவாசனுக்கு ஜோடியாக நடித்த மீனாவையே பசுபதிக்கு ஜோடியாக்கியிருக்கிறார்கள்.