படமாகும் 'வெக்கை' நாவல்!

புதன், 6 பிப்ரவரி 2008 (16:32 IST)
தமிழில் நாவல்கள் படமாவது அபூர்வம். கடைசியாக தங்கர்பச்சான் தனது 'ஒன்பது ரூபாய் நோட்டு' நாவலை படமாக்கினார். விரைவில் எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலும் படமாகிறது.

ஏற்கனவே தனது 'கருவேலம் பூக்கம்' கதையை படமாக்கியிருக்கிறார் பூமணி. தீப்பெட்டி தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளர்களின் அவலத்தை கருவேலம் பூக்கள் தோலுரித்துக் காட்டியது.

அதேபோன்று ரத்தமும் சதையுமான கிராமத்துக் கதை 'வெக்கை' நாவல். மதுரை பின்னணியில் எழுதப்பட்ட கதை என்பதால் மதுரை வட்டார வழக்கில் இரண்டு பாடல்கள் படத்தில் இடம்பெறுகிறது. இந்த இரண்டு பாடல்களையும் பூமணியே எழுதியுள்ளார்.

தொழில் முறை கலைஞர்கள் இல்லாமல், சாதாரண ஜனங்களின் நடிப்பில் தயாராக உள்ளதுஐ பூமணியின் 'வெக்கை'.

வெப்துனியாவைப் படிக்கவும்