ரஜினி புத்தகத்திற்கு முதல்வர் வாழ்த்துரை!

சனி, 2 பிப்ரவரி 2008 (19:45 IST)
ரஜினியின் வாழ்க்கையை கசக்கி சாறுபிழிந்து, 'ரஜினி சப்தமா சகாப்தமா' என்றொரு புத்தகத்தை கிழக்குப் பதிப்பகம் கொண்டு வந்தது. புத்தகம் அமோக விற்பனை.

அதே புத்தகம் 'சிவாஜி' படத்தை எப்படி எடுத்தார்கள் என்பதை தொகுத்து சென்ற மாதம் ஒரு புத்தகம் வெளியிட்டது.

இந்த வரிசையில் அடுத்ததாக வரயிருக்கும் புத்தகம் 'ரஜினி பேரை கேட்டாலே'... எழுதியிருப்பவர் ஒரு மருத்துவர். பெயர் காயத்ரி ஸ்ரீகாந்த். ஆங்கிலத்தில் புத்தகத்தின் பெயர் 'தி நேம் ஈஸ் ரஜினிகாந்த்!'

ரஜினி இந்தப் புத்தகத்தைப் படித்து காயத்ரியை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். புத்தகத்துக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்துரையும், கமல்ஹாசன் அணிந்துரையும் எழுதியுள்ளனர்.

மார்ச் மாதம் புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விற்பனைக்கு வருகிறது. விற்பனையை தொடங்கி வைக்க நடிகர் அமிதாப்பச்சன் சென்னைக்கு வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்