நடிகை தேவயானிக்கு பெண் குழந்தை பிறந்ததிருக்கிறது. இதனை இனிப்பு கொடுத்துக் கொண்டாடினார் ராஜகுமாரன்.
காதலித்து திருமணம் செய்துகொண்ட தேவயானி, திருமணத்திற்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்ட சில நடிகர்களின் படங்களில் மட்டுமே நடித்தார்.
கோலங்கள் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வந்த தேவயானிக்கு இரண்டு வருடங்களுக்கு முன் பெண் குழந்தைப் பிறந்தது. இப்போது மீண்டும் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
சென்னை சேத்துப்பட்டிலுள்ள மருத்துவமனையில் தேவயான பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிசேரியன் மூலம் அவருக்கு பெண் குழந்தைப் பிறந்தது.
தாயும், சேயும் நலம் என தெரிவித்த ராஜகுமாரன், குழந்தை பிறந்த மகிழ்ச்சியை மருத்துவமனை ஊழியர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடினார்.