இது குறித்து நிலைக்குழுவின் தலைவர் ஜாஃபர் இக்பால் செளத்ரி கூறுகையில், இந்தியாவில் படங்கள் வெளியாகி ஒரு வருடம் கழித்து அந்த படங்களைப் பாகிஸ்தானில் திரையிடலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதை அமல்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போருக்கு பின்னர் பாகிஸ்தானில் இந்தியத் திரைப்படங்களைத் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இருந்தாலும், இந்தித் திரை நட்சத்திரங்களுக்கு பாகிஸ்தானில் பெரும் வரவேற்பு நிலவி வருகிறது. பாகிஸ்தானிய நடிகை, நடிகர்களும் இந்தி திரைப்படங்களில் அவ்வப்போது நடித்து வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த 2006 ஆம் ஆண்டு, திலீப்குமார் நடித்த "முகல் இ ஆசம்' திரைப்படத்தை அதன் இயக்குனர் ஆசிப் வேண்டுகோளுக்கு இணங்க, பாகிஸ்தானில் திரையிட அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரஃப் அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.