கமலஹாசன் மகள் ஸ்ருதி நடிக்க வந்தது தெரியும். பிரிவோம் சந்திப்போம் படத்தை தயாரித்த ஞானம் பிலீம்ஸூதான் அந்த படத்தை தயாரிக்கிறது.
படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்கிறார். என்றென்றும் புன்னகை என்று படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.
வருகிற பிப்ரவரியிலிருந்து ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. கதை வெளிநாட்டில் நடப்பது மாதிரி இருப்பதால் முழு படப்பிடிப்பையும் வெளிநாட்டிலேயே நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.