நமீதாவி‌ற்கு செ‌ன்ற இட‌த்‌திலெ‌ல்லா‌ம்...

திங்கள், 28 ஜனவரி 2008 (10:50 IST)
நமீதாவிற்கு சென்ற இடங்க‌ளிளெல்லாம் பிரச்னையாக இருக்கிறது. கடை திறப்பு விழா, ஒரு கலை விழா என்று உள்ளுர் நிகழ்ச்சியில் பங்கு பெறும் போது ரசிகர்களின் தொல்லை தாங்க முடியவில்லை.

அதுவும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் இத்தூண்டு ஆடை அணிந்து காட்சியளித்த பிறகு நமீதா தமிழ்நாட்டு ரசிகர்களி‌ன் கவர்ச்சி கனவு கன்னியாகிவிட்டார்.

அவர் எந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அவரை ஃபோட்டோ எடுக்க கேமரா செல்லுடன் ரசிகர்கள் துரத்த ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இதனால் தன்னுடைய சுதந்திரம் போச்சு என்று ஒப்பாரி வைக்கிறார் நமீதா.

வெப்துனியாவைப் படிக்கவும்