விஜய் முன்பெல்லாம் ரொம்பவும் ரிசர்வ் டைப்பாக இருப்பார். சக நடிகர்களிடம் கூட அவ்வளவாக பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளமாட்டார்.
ஆனால் இப்போது அந்த விசயத்தில் ரொம்பவே மாறி போயிருக்கிறார். புதுமுக நடிகர்களின் படபூஜை, கேசட் வெளியீட்டு விழா என்று கலந்து கொண்டு எல்லோரையும் என்கரேஜ் செய்கிறார்.
இப்படி விஜய் எல்லோரிடமும் நெருங்கிப் பழகுவதற்கு முக்கிய காரணம் இருக்கிறதாம்.
விரைவில் அரசியலில் ஈடுபடும் திட்டத்தில் இருக்கும் விஜய் தன்னை ஆதரிக்கும் ஒரு கூட்டத்தை தயார் செய்து கொள்வதற்காகத்தான் என்கிறார்கள்.